Monday, 6 April 2015

உலக சாதனை படைத்த 100-வயது பாட்டி

ஏப்ரல்:6-ஜப்பானில் உள்ள மட்சுயாமா என்ற நகரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில் பெண்கள் ப்ரி ஸ்டைல் பிரிவுக்கான 1500 மீட்டர் பின் புற நீச்சல் போட்டியில் 100 வயதான மீக்கோ நகோகா என்ற பாட்டி உலக சாதனை படைத்துள்ளார். இந்த வயதிலும் பின் புற நீச்சல் போட்டியில் உலக சாதனை படைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.பின் புற நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 15 நிமிடம் 54 விநாடிகளில் பின் புறமாக நீச்சலடித்து உலக சாதனை படைத்துள்ளார்.1914-ம் ஆண்டு பிறந்த இவர் நீச்சல் என்பது தெரியாமல் இருந்து வந்தார். அவரது முழங்காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 82 வயதில் தனது முதல் நீச்சல் பயிற்ச்சியை கற்றுக்கொள்ள தொடங்கினார். நீச்சல் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்ட அவர், 2002 -ம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் முதல் முறையாக கலந்துகொண்டார்.அங்கு முதன் முறையாக தான் கலந்துகொண்ட 50 மீ பின்புற நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.அதனை தொடர்ந்து 2004 -ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற 50 மீ, 100 மீ மற்றும் 200 மீ பின்புற நீச்சல் போட்டிகளில் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனைகளை குவித்தார்.அவரது 90-வயதில் ஜப்பான் நாட்டின் தேசிய நீச்சல் வீராங்கனை என்ற அங்கீகாரம் கிடைத்தது. தனது பயிற்சி மூலம் அடுக்கடுக்கான சாதனைகளை குவிக்க தொடங்கினார். 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பின்புற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்தார்.நீச்சல் பயிற்சியை மேற்கொள்வதற்காக தொடர்ந்து நீச்சல் பயிற்சியாளரிடம் ஆலோசனைகளும், முயற்சிகளும் நடத்தி வந்தார்.ஜப்பானில் உள்ள மட்சுயாமா என்ற நகரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில் பெண்கள் ப்ரி ஸ்டைல் பிரிவுக்கான 1500 மீட்டர் பின் புற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை படைத்தார்.அவரது சாதனையை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

No comments:

Post a Comment