பாகிஸ்தானுக்கு ரூ.6,200 கோடி ஆயுத சப்ளை
ஏப்ரல்:09-தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் பாகிஸ்தான் ஆயுதங்களையும், போர்த்தளவாடங்களையும் குவித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.இந்த நிலையில், 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,200 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள், போர்த்தளவாடங்கள் சப்ளை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டது.பாகிஸ்தான் கேட்ட ஆயுதங்கள், தளவாடங்களின் பட்டியலில் முக்கியமாக, 15 ‘ஏஎச்–1 இசட் வைபர்’ தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 32 ‘டி–700 ஜிஇ 401 சி’ என்ஜின்கள், 1000 ‘ஏஜிஎம்–114 ஆர் ஹெல்பயர் 2’ ஏவுகணைகள், 36 ‘எச்–1’ தொழில்நுட்ப புதுப்பிப்பு பணி கம்ப்யூட்டர்கள், 17 ‘ஏஎன்/ஏஏகியூ–30’ இலக்கு பார்வை சாதனங்கள் மற்றும் பல இடம்பெற்றுள்ளன.கணினி சார்ந்த ஏராளமான தளவாடங்களை சப்ளை செய்யுமாறும் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டிருந்தது.இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் மதிப்பிலான இந்த ஆயுதங்களையும், தளவாடங்களையும் சப்ளை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அது அறிக்கையும் அளித்துள்ளது.‘‘பாகிஸ்தான் நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில், பல நூறு கோடி டாலர்களை பாகிஸ்தான் வீணாக்கி வருகிறது. அதை அந்த நாட்டின் சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு பயன்படுத்த முடியும்’’ என அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தலையங்க கட்டுரை வெளியிட்ட சுவடு மறைவதற்கு முன்பாக பாகிஸ்தானுக்கு அதே அமெரிக்கா ரூ.6,200 கோடி மதிப்பிலான ஆயுதங்களையும், போர்த்தளவாடங்களையும் விற்பனை செய்ய முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment